சென்னை, ஏப்.29-

எம்.பி.பி.எஸ். இடங்கள்
தமிழ்நாட்டில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு 1,653 இடங்கள் உள்ளன. இவை தவிர 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றின் மூலம் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 635 உள்ளன. எனவே இப்போதைக்கு எம்.பி.பி.எஸ். சேர மொத்தத்தில் 2 ஆயிரத்து 288 அரசு இடங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரி தான் உள்ளது. அதாவது சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரிதான் ஆகும். இந்த கல்லூரியில் பி.டி.எஸ். சேர 85 இடங்கள் உள்ளன. 17 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அவற்றின் மூலம் 891 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன.