அஸ்ஸலாமு அலைக்கும் கீராநல்லூர் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது*இந்த இணயதளத்தில் உங்கள் திருமணம் வாழ்த்துக்கள் மற்றும் ஊரில் நடக்கும் நிகழ்சிகளும் வெளி இடப்படும் அனுப்ப வேண்டிய இ-மெயில் :nisar9752@gmail.com

Friday, August 24, 2018

தலைமையில் இருப்பவர் கடமை தவறினால் ....

அஸ்ஸலாமு அலைக்கும்  
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டார்கள்: ''முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி, அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றான்.'' (அறிவிப்பாளர்: மஃகில் பின் யஸார் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)

இஸ்லாம் கூறும் மனிதநேயம்...!

ஹாரிஸ்  ஜமாலி
தற்போதைய இயந்திரத்தனமான உலகில் மனிதர்களிடம் மிக குறைந்து வருவது மனித நேயம் .
1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர சகோதரிகளே…’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார் .

Monday, May 2, 2011

மருத்துவ படிப்புக்கு 16-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்

சென்னை, ஏப்.29-
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 16-ந்தேதி முதல் வழங்கப்படுகின்றன. கவுன்சிலிங் ஜுன் 30-ந்தேதி தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ். இடங்கள்
தமிழ்நாட்டில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு 1,653 இடங்கள் உள்ளன. இவை தவிர 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றின் மூலம் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 635 உள்ளன. எனவே இப்போதைக்கு எம்.பி.பி.எஸ். சேர மொத்தத்தில் 2 ஆயிரத்து 288 அரசு இடங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரி தான் உள்ளது. அதாவது சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரிதான் ஆகும். இந்த கல்லூரியில் பி.டி.எஸ். சேர 85 இடங்கள் உள்ளன. 17 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அவற்றின் மூலம் 891 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன.

உடம்பெல்லாம் எரியுதா? சீதாப்பழம் சாப்பிடுங்க

 
அவசர காலத்தில் எதையெல்லாமோ மறந்து போனோம். அதில் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களையும் தான். இயற்கையே மனிதனுக்கு சூட்சுமாக காட்டுவதை பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. ‘இப்போ நான் பழமா பழுத்துருக்கேன்.சாப்பிட்டு போனீங்கன்னா உங்க உடம்புக்கு நல்லது’ ன்கு எந்த பழமும் வாய் திறந்து சொல்ல முடியாது. வெயில் காலத்தில் நெல்லிக்காய் சந்தைக்கு வரும். அதை வாங்கி வாயில் பாட்டு சுவைத்தால் உடம்புக்கு குளிர்ச்சி. எவ்வளவு தூரம் நடந்தாலும் களைக்காது. நெல்லிக்காய் வற்றலை வாயில் போட்டு புட்பால் விளையாடினால் ரொனால்டோவை கூட மிஞ்சி விடலாம். அது தான் ஒவ்வை கொடுத்த நெல்லிக்கனிக்கு சிறப்பு.சரி அதை பிறகு பார்க்கலாம்.
இப்போது சீத்தாப்பழ சீசன். சின்னப்பிள்ளைகள் கையில கெடச்சா அப்படியே ஒவ்வொரு விதையிலயும் ஒட்டியிருக்கிற வெண்மை நிற கரகரப்பான இனிப்போட இருக்கிற சதையை சீதாப்பழத்துல இருந்து எடுத்து சாப்பிடற விதமே அழகு. இந்த பழத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்.முடிந்தால் உங்கள் வீட்டில் ஒரு சீதாப்பழ மரத்தை நடுங்கள்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள்

உயர்ந்துவரும் விலைவாசிக்கு மிக முக்கியகாரணங்களில் ஒன்று வேளாண் உற்பத்தி குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிர்கால தேவையை பூர்த்தி செய்யமுடியும், அரசும் , தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .
உற்பத்தியை அதிக படுத்தாதவரை விலைவாசியை குறைக்க முடியாது. எனவே வரும் காலங்களில் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்து படிப்பதால் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லை.

Friday, January 7, 2011

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ்-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.

பிப்ரவரி 4, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) இவ்வாண்டுக்கான மீலாத் பேச்சுப் போட்டியினை 04.02.2011 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் சரியாக 4.30 மணிக்கு நடத்த இருக்கிறது.
இன்றைக்கும் பொருந்துகிற இறுதித்தூதரின் சொற்கள், அரபகம் – அண்ணலாரின் வருகைக்கு முன்னரும், பின்னரும் ஆகிய தலைப்புகளில் போட்டியாளர்கள் பேசலாம்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.
 

அலைபேசி அருமைகளும், அவலங்களும்…


மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி லிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27 ஆகிறது.
1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.